மாணவர்களை தாக்கும் மர்மநபர்கள் – கொந்தளிக்கும் டெல்லி !

Published On: December 16, 2019
---Advertisement---

1a8d23daa19ec8a854e2ed8706b8c100

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடிக்க அவர்களை ஒடுக்க போலிஸார் மாணவர்களைத் தாக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஒடுக்குவதற்காக பல்கலைக் கழக வளாகத்தில் அத்துமீறி நுழைந்த போலிஸார் அங்கு கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசியும், மாணவர்கள் மேல் தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கலைத்தனர்.

இந்நிலையில் போலீஸாரோடு வந்த வேறு சிலரும் மாணவர்களைத் தாக்கினர், சீருடை இல்லாத ஆனால் தலைக்கவசம் மற்றும் புல்லட் ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்த அவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. போராட்டங்களை ஒடுக்குவதில் பாஜக அரசு அராஜகமாக நடந்து கொள்வதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment