மேட்ச்சும் போச்சு:சம்பளமும் போச்சு – இந்திய வீரர்கள் புலம்பல்!

Published on: February 6, 2020
---Advertisement---

0a171bf77b73e49b16988c4a9d26138d

குறிப்பிட்ட காலத்துக்குள் பந்துவீசாமல் இழுத்தடித்த இந்திய அணிக்கு ஐசிசி போட்டி ஊதியத்தில் இருந்து 80 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் சேர்த்தும் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய பவுலர்கல் வாரி வழங்கும் வள்ளல்களாக மாறியதாலும் மோசமான பீல்டிங்காலும் இந்தியா போட்டியில் தோல்வி அடைந்தது.

அதுமட்டுமில்லாமல் இப்போது போட்டி ஊதியத்தில் 80 சதவீதத்தை இழந்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் இந்திய அணி ஓவர்களை வீசாத்தால் ஐசிசி இந்த தண்டனையை வீரர்களுக்கு வழங்கியுள்ளது. தவறை ஒத்துக்கொண்டு இந்திய கேப்டன் கோலி அபராத்த்தை செலுத்த ஒத்துக்கொண்டததால் விசாரணை எதுவும் வேண்டாம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

Leave a Comment