சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தில் நாயகியாக மீனாவும் வில்லி போன்ற ஒரு வேடத்தில் குஷ்புவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட மீனாவின் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வலம் வந்தது. அந்த புகைப்படத்தில் மீனா சேலை கட்டி பூ வைத்து இருந்ததால் ஒரு பக்கா கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது
இதனை அடுத்து சற்று முன் வெளியான இதே படத்தின் இன்னொரு புகைப்படத்தில் மீனா பேண்ட் சர்ட் கோட் அணிந்து நவநாகரீக பெண்ணாக உள்ளார். முதலில் வெளிவந்த புகைப்படத்திற்கு இந்த புகைப்படத்திற்குமிடையே முற்றிலும் வித்தியாசம் இருந்ததால் ரசிகர்கள் முதலில் குழம்பினார்
ஆனாலும் இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தபோது வெளிநாட்டில் இருந்து கிராமத்துக்கு வரும் பெண்ணை நமது தமிழ் கலாச்சாரத்தை சொல்லி தந்து ரஜினி மாற்றுவது தான் இந்த படத்தின் கதை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். நெட்டிசன்கள் ஏன் இந்த யூகம் சரியா? என்பதை படம் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…