சினிமாவில் விபச்சாரம் கொடிகட்டி பறக்குது - மீராமிதுன் வெளியிட்ட வீடியோ
எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் மீராமிதுன். அவரை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்றாலும் தன்னை பிரபலமாக அவரே கருதுக்கொள்பவர். அழகிப்போட்டிகளில் மோசடி செய்ததாக புகாரில் சிக்கியவர். பிக்பாஸ் வீட்டில் சேரன் மீது பாலியல் புகார் கூறி பின் அசிங்கப்பட்டவர். தன்னை இண்டர்நேஷனல் மாடல் என அவரே தன்னை அழைத்துக்கொள்பவர். மாடலிங் போட்டோஷூட் எடுப்பதில் நடிகைகள் தன்னை பின் பின் தொடர்வதாக தொடர்ந்து கூறி வருபவர்.
சமீபத்தில், தலித் சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் தன்னுடையை திறமைகளை திருடி வருவதாக அவர் கூறிய கருத்து கடும் கண்டனத்திற்கு உள்ளானது. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், தனது யுடியூப் சேனலில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை என்கிற தலைப்பில் பேசியுள்ள அவர் ‘இந்தியாவிலேயே நான் சூப்பர் மாடல், நடிகை மற்றும் தொழிலதிபர். ஆனால், எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். என் பெயரை கெடுக்கும் வகையில் ஒரு கூட்டமே வேலை செய்கிறது. தமிழ் சினிமா விபச்சார கூடமாக மாறிவிட்டது. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். நான் தமிழ் பெண்ணாக இருப்பதால் என்னை வளரவிடாமல் தடுக்கிறார்கள். வன்கொடுமை செய்கிறார்கள்’ என மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல், நான் புத்திசாலியாக இருப்பதால் என் வளர்ச்சியை தடுக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் நீதிமன்றம் சென்று அலைந்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் இன்னும் சாதிக்க வேண்டும் என கனவு காண்கிறேன். அரசியல்வாதியாக சமூக சேவகியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்னை கைது செய்ய வேண்டும் என பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை இதுதானா?. சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.