
பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவரின் நடவடிக்கைகளால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் அவர் செய்யும் அனைத்து காரியங்களையும் நெட்டிசன்கள் எதிர்மறையாகவே விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைத்தள பக்கங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களின் கோபத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், இன்று காதலர் தினம் என்பதால், ஒரு வாலிபருடன் அவர் இருசக்க வாகனத்தில் அமர்ந்து செல்லும் புகைப்படத்தை அவருக்கு தெரிந்த ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளர். அதற்கு பதில் கூறியுள்ள மீரா மிதுன் ‘முடிஞ்சா என்ன கண்டுபிடி’ என பதிலளித்துள்ளார்.
Catch me if you can folks ♥️ https://t.co/v8EV4UB2yn
— Meera Mitun (@meera_mitun) February 13, 2020