விஜய் படத்துல ஹீரோயின் எல்லாம் எப்படி ட்ரஸ் பன்றாங்க – ரசிகர்களின் ஆபாச விமர்சனத்து மீரா மிதுன் பதில்!
விஜய் ரசிகர்களுக்கும் மீரா மிதுனுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றன.
கடந்த ஒரு வாரமாக விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் மீரா மிதுனுக்கும் இடையே சமூகவலைதளம் மூலமாக கடுமையான வார்த்தை மோதல் நடந்து வருகிறது. இருவரும் மாறி மாறி மற்றவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய் ரசிகர் மன்ற தலைவரான ஈ சி ஆர் சரவணன் என்பவர் மீரா மிதுனை ஆபாசமாக பேசியும் அவர் உடையும் முறைகள் பற்றியும் விமர்சனம் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக மீரா, ’விஜய் ரசிகர் மன்ற தலைவர் சரவணன் என்னுடைய உடைகளை பற்றி கமெண்ட் செய்துள்ளார். இவர்களுக்கெல்லாம் இன்னொருவரின் உடையைப் பற்றி பேச யார் உரிமை கொடுத்தது. இதற்கிடையில் விஜய் படத்தில் நடிக்கும் பெண்கள் எல்லாம் ஒன்றும் புர்கா அணிந்து நடிக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.