நான் தற்கொலை செய்தால் அவரே காரணம் – மீராமிதுன் பகீர் புகார்

Published on: June 16, 2021
---Advertisement---

c8dd9be1ad11b956057b328111b91089

சில மாடலிங் போட்டிகளில் கலந்து  கொண்டு பட்டம் பெற்றவர் மீரா மிதுன். அதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கு பலருடனும் சண்டை போட்டு அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.  

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி இருவரின் டிவிட்டர் ஐடிக்கு டேக் செய்துள்ளார்.

65c1f0371cc54fc75786a10aa7683734

தான் முன்பு பணிபுரிந்த அஜித் ரவி என்பவர் கடந்த 3 வருடங்களாக தன்னை வளரவிடாமல் தடுப்பதாகவும், அவரால் மன உளைச்சல் ஏற்பட்டு நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் மீது பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஜொலிப்பதே தன் லட்சியம் எனவும், அஜித் ரவி இதை பல வருடங்களாக தடுத்து வருவதாகவும் சுஷாந்த் சிங் போல நான் தற்கொலை செய்தால் என் மரணத்திற்கு பின் அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும் என அவர் டிவிட் செய்துள்ளார்.

 

Leave a Comment