1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமன் மற்றும் சீதை சிலையை திகவினர் செருப்பால் அடித்து அசிங்கப்படுத்தியதாகவும், அதை துக்ளக் பத்திரிகையில் சோ எழுதியதாகவும் ரஜினி பேசியிருந்தார்.
ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை எனவும், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திகவினர் கூறினார். ஆனால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினி தெரிவித்து விட்டார்.
கடந்த 2 நாட்களாக இந்த விவகாரமே சமூகவலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ரஜினிக்கு ஆதரவாக சிலரும், எதிராக பலரும் பல்வேறு ஹேஷ்டேக்குகளில் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அவர் எப்போதும் சிறந்த மனிதராக இருக்கிறார். எனவே, முதலைகள் சூழ்ந்திருக்கும் அரசியலில் அவர் எப்படி தாக்குப்பிடிப்பார் என்கிற பயம் எனக்கு இருந்தது. ஆனால், தற்போது அவர் களத்திற்கு தயாராகி விட்டது தெரிகிறது எனக்கூறி #மன்னிப்பு_கேட்க_முடியாது என்கிற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் அக்கா துக்ளக் வாசகரா என கிண்டலடித்து வருகின்றனர்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…