கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு இடையே நடக்கும் மோதல் இப்போது அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
நடிகை மீரா மிதுன் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் ஒவ்வொருவராக தாக்குதல் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது என சொல்ல அது அவரின் ரசிகர்களை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியது. அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் (ஆபாசமான அந்த வார்த்தையை ஓபனாக சொல்லி காட்டுகிறார்) எனக் கூறியுள்ளார்.
இரு தரப்புமே இதுபோல மாறி மாறி அநாகரிகமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து மீரா மிதுனை மிகவும் ஆபாசமாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதை பகிர்ந்து திருநெல்வேலி போலிஸை டேக் செய்த மீரா ஜி பி முத்து மேல் புகாரளிக்க தனது வழக்கறிஞர் காவல் நிலையம் வருவார் எனக் கூறியுள்ளார். இதனால் இப்போது இந்த விஷயம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…
Pongal Release:…
Sun serials:…
Veera Dheera…