என் மேல் கையை வச்சா செத்துருவேன்.. கைதுக்கு முன் போலீசாரை மிரட்டிய மீராமிதுன் (வீடியோ)..

by adminram |

36bc1ea5421703d72ce4884e19b358f0

டிவிட்டரில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் மாடல் அழகி மீரா மிதுன் சமீபத்தில் ‘தலித் சமுதயாத்தை சேர்ந்த இயக்குனர்கள் என் முகத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களை சினிமாவை விட்டே துரத்த வேண்டும்’ என பட்டியலின சமூகத்தை குறிப்பிட்டு இழிவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். எனவே, அவர் மீது சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், என்னை கைது செய்வது கனவிலும் நடக்காது என போலீசாருக்கு சவால் விட்டு அவர் யுடியூப்பில் வீடியோ வெளியிட்டு வந்தார்.

ba4380f833d52c5d857f7dab6864d662

தற்போது கேரளாவில் பதுங்கியிருந்த மீராமிதுனை போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீசாரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்த போது ‘ போலீஸ்னா அட்ராசிட்டி செய்வீர்களா?.. என்னை கைது செய்தால் கத்தியால் குத்திக்கொண்டு நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என அவர் மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

Next Story