யுடியூப்பில் செம ஹிட்! மாநாடு படத்தின் ‘மெஹரசைலா’ பாடல் வீடியோ…

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.      

இப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் ‘Meherezylaa’ மெஹர சைலா பாடல் வீடியோ தற்போது வெளியாகி சிம்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலில் சிம்புவும், கல்யாணி பிரியதர்ஷனும் ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இப்படால் வெளியாகி சில நிமிடங்களில் 3 லட்சத்து 32 ஆயிரம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். 62 ஆயிரம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

Published by
adminram