வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இருந்து முதல் பாடல் Meherezylaa டீசர் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குவால் அறிவிக்கப்பட்டது. எனவே, டிவிட்டரில் #Maanaadu என்கிற ஹேஷ்டேக்குடன் இந்த தகவலை சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், இந்த டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இது ஒரு டூயட் பாடல் என்பதால் சிம்புவும், கல்யாணி பிரியதர்ஷனும் ரொமான்ஸ் செய்யும் காட்சி இருக்கும் என பார்த்தால் வெஙக்ட்பிரபு, யுவன் சங்கர் ராஜா அருகில் நின்று பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதைப்பாத்து அப்செட் ஆன சிம்பு ரசிகர்கள் ‘சிம்பு எங்கடா?’ என கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…