அப்பனும் மகனும் சேர்ந்து நல்ல பண்றாய்ங்க... " எம்ஜிஆர் மகன் " கலக்கல் ட்ரைலர்!
வழக்கமாக தீபாவளி திருநாள் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில், புது உடை, பட்டாசு, இனிப்போடு சேர்ந்து அவர்களின் மனம் கவர்ந்த ஹீரோக்களின் திரைப்படங்களும் வெளியாகும். சினிமா ஹீரோக்களும் தீபாவளி ரிலீசாக தங்கள் படங்கள் வெளியாக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
ஆனால், இந்த வருடம் கொரோனா தாக்கத்தால் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. கடந்த மார்ச் மாதம் முதலே திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றது. இருந்தும் படத்தின் வேலைகளும் ott தளத்தில் ரிலீஸ் என ரசிகர்களை திருப்தி படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார்.
டப்ஸ்மாஷ் புகழ் மிர்னாலினி ரவி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ்,சரண்யா பொன்வண்ணன்,சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்ப்போது இப்படத்தின் அமர்க்களமான ட்ரைலர் தீபாவளி தினத்தை முன்னிட்டு படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.