Cinema History
சிவாஜி பற்றி கேட்ட கேள்விக்கு நெத்தியடியாய் எம்ஜிஆர் சொன்ன பதில்… திகைத்த நிருபர்!
நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை பத்திரிகையாளர் இக்கட்டான கேள்விகளைக் கேட்டுவிட்டால் அவர்களது பதில் மழுப்பலாக இருக்கும். அல்லது அதற்கு பதில் சொல்லாமல் எழுந்து சென்று விடுவர். ஆனால் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் எம்ஜிஆரை நோக்கி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அந்தக் கேள்விக்கு எம்ஜிஆர் சொன்ன பதில் எல்லாமே பளிச் பளிச் சென்று இருந்தது. அப்படி ஒரு கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். அது இதுதான்.
இனி மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது. இயற்கையான நடிப்புக்குத் தான் வரவேற்பு இருக்கும்னு பேசுனீங்களே, அந்தப் பேச்சு சிவாஜியைத் தாக்கி அமைந்த பேச்சு தானே என்று அந்த கேள்வி கேட்கப்பட்டது.
‘இயற்கையான நடிப்புக்குத் தான் எதிர்காலத்திலே வரவேற்பு இருக்கும்னு நான் குறிப்பிட்டா உடனடியா சிவாஜியை நான் தாக்கிப் பேசியதா நீங்க ஏன் நினைக்கிறீங்க?
சிவாஜி மிகையாக நடிக்கிறதா நீங்க நினைக்கிறீங்களா? சிவாஜியோட நடிப்பை அப்படி ஏன் குறை சொல்றீங்க? சிவாஜி எந்தளவுக்கு உன்னதமான நடிகர்? இப்படி எல்லாம் பேசி சிவாஜிக்கு நீங்கள் களங்கம் விளைவிக்காதீர்கள்’ என்று அந்த நிருபரைப் பார்த்து எம்ஜிஆர் பதில் சொன்னாராம்.
இன்னொரு நிருபர் கேட்ட கேள்வி இதுதான். ஒரு நடிகையை நீங்கள் ஒப்பந்தம் செய்து விட்டு வேறு எந்த கதாநாயகனுடனும் நடிக்கக்கூடாது என நிபந்தனை விதித்ததாகவும், இப்போ அந்த நடிகை நிபந்தனையை மீறி விட்டதாகவும் சொல்கிறார்களே… என எம்ஜிஆரைப் பார்த்துக் கேட்டாராம்.
அதற்கு எம்ஜிஆர் ‘ஏன் சுற்றி வளைச்சிப் பேசறீங்க. மஞ்சுளா என்று நேரடியாகக் கேளுங்களேன். அவர் மற்ற நடிகரோடு நடிக்கலாம் என்று நான் தான் அவரை ஊக்குவித்தேன். என்னிடத்தில் பயிற்சி பெற்ற நடிகை மற்ற நடிகர்களுடன் நடித்தால் எனக்குத் தானே அது பெருமை’ என பதில் சொன்னாராம் புரட்சித்தலைவர்.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.