More
Categories: Cinema History latest news

மோகன் படத்தைப் பார்த்த எம்ஜிஆர்… பயந்து நடுங்கிய தயாரிப்பாளர்… புரட்சித்தலைவர் சொன்ன அட்வைஸ்

1982ல் வெளியானது பயணங்கள் முடிவதில்லை. மைக் மோகனின் திரையுலக வரலாற்றில் இது ஒரு மைல் கல். பாடல்கள் எல்லாமே பட்டையைக் கிளப்பியது. பாடல்களால் படம் ஓடும் என்பதற்கு இது தான் நல்ல உதாரணம்.

அப்போதைய காலகட்டத்தில் இது ஒரு ட்ரெண்ட்செட்டையே உருவாக்கியது. படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வெள்ளி விழா கொண்டாடியது. இந்தப் படம் செய்த சாதனைகள் இதோ.

Also Read: சரத்குமாரை பழிவாங்கத் துடித்த வரலட்சுமி… அதுக்காக இப்படியா பண்றது?

இந்தப் படம் 526 நாள்கள் ஓடி சரித்திரம் படைத்தது. இயக்குனர் ஆர்.சுந்தரராஜனுக்கு இதுதான் முதல் படம். கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ்சுக்கும் இதுதான் முதல் வெற்றிப் படம்.

நடிகை பூர்ணிமாவுக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம். மோகனுக்கு நட்சத்திர அந்தஸ்தைத் தந்ததும் இதுதான். இளையராஜாவுக்கு இசை உலகில் முக்கிய தடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

இந்தப் படம் ஒரு காதல் ஓவியம். அந்தக் கால இளசுகளைக் கவர்ந்து இழுக்க இதுவும் ஒரு காரணம். இளையநிலா பொழிகிறது, மணியோசைக் கேட்டு, ராகதீபம், சாலையோரம், வைகரையில், தோகை இளமயில், ஏ ஆத்தா ஆத்தோரமா வர்றீயா ஆகிய பாடல்கள் எல்லாமே செம மாஸ். பாடல்களுக்காகவே பலதரப்பு ரசிகர்களும் மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வந்தார்கள்.

கோவைத்தம்பியைப் பார்த்து எம்ஜிஆர் இந்தப் படத்தின் மூலம் இன்னும் ஒருவாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்தளவுக்கு படம் சிறப்பாக உள்ளது. வெற்றியும், தோல்வியும் நிரந்தரமல்ல. உன் விவேகத்தால் அதைத் தக்க வைத்துக் கொள் என்றாராம் புரட்சித்தலைவர்.

Also Read: பார்க்கிறதுக்கு முன்னாடியே படம் தோல்வினு சொன்ன வைரமுத்து! ரஜினி மேல் ஏன் இவ்ளோ காட்டம்?

இந்தப் படத்தின் அமோக வெற்றியால் ஒரே வாரத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக மதர்லேண்ட் பிக்சர்ஸ் மாறியது. மோகன், பூர்ணிமா இருவருக்கும் பிலிம்பேர் விருது கிடைத்தது. ஆர்.சுந்தரராஜனை ஒரே படத்தின் மூலம் திரையுலகில் அடையாளப்படுத்தியது.

Published by
ராம் சுதன்