கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக எம் ஜி ஆர் 1980 களில் ரஜினியை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து அடித்ததாக ஒரு செய்தி வெளியானது.
கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்கள் வாயிலாகவும் வாய்வழிச் செய்தியாகவும் சொல்லப்படும் செய்தி இது. ரஜினி அப்போது பிரபலமாக இருந்த நடிகை ஒருவரைக் காதலித்ததாகவும் அது பிடிக்காத எம் ஜி ஆர், ரஜினியை தன்னுடைய ராமாவரம் தோட்டத்துக்கு வரவழைத்து அடி வெளுத்து வாங்கியதாகவும் சொல்லப்படும் கதை.
ரஜினியின் இமேஜைக் கெடுப்பதற்காக இதைப்பலரும் பரப்பி சமூக வலைதளங்களில் பரப்புவதாக ரஜினி ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி எம் ஜி ஆரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் ’அது போன்ற ஒரு சம்பவம் நடக்கவில்லை. ஆனால் ஒரு பொதுக்கூட்டத்தில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஒரு தொண்ட்ரை அதுபோல அழைத்து எம் ஜி ஆர் அடித்தார்’ எனக் கூறியுள்ளார்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…