More

பள்ளிகள் திறப்பது எப்போது? – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகவும் குறைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழே சென்றுவிட்டது. எனவே, பள்ளிகள் விரைவில் திறக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு பெற்றோரிடம் ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் ஜுலை 2வது, அல்லது 3வது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே பரவலாக மக்களின் கருத்தாக உள்ளது. எனவே,  மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும்’ என அவர் தெரிவித்தார்.

Published by
adminram

Recent Posts