More

முழு ஊரடங்கில் ரேஷன் கடை செயல்படுமா? – அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் 2வது கொரோனா அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் 35 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. எனவே, கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அறிமுகப்பட்டது. ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.  எனவே, கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.      

Advertising
Advertising

முடிவில் தமிழகத்தில் தளர்வுகள் இன்றி மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் ஒரு வாரத்திற்கு கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.  காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் உட்பட எந்த கடையும் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ஊரடங்கில் தமிழகத்தில் ரேஷன் கடை செயல்படுமா என்கிற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கமளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ‘இதுபற்றி முதல்வரிடம் ஆலோசனை செய்து விட்டு தெரிவிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். எனவே, விரைவில் இதுபற்றிய தகவலை அவர் அறிவிப்பார் என எதிபார்க்கப்படுகிறது.

Published by
adminram

Recent Posts