அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற கார் விபத்து – உதவியாளர் மரணம் !

2b643d9186deb2847e0d287035d2ce50

அமைச்சர் விஜயபாஸ்கரை விமான நிலையத்தில் விட்டுவிட்டு திரும்பிய கார் விபத்துக்குள்ளானதில் அவரின் உதவியாளரும் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் விஜயபாஸ்கர். இவரின் தனி உதவியாளராக செயல்பட்டு வந்தவர் வெங்கடேசன். இவர் நேற்றிரவு திருச்சி விமான நிலையத்தில் விஜயபாஸ்கரை விட்டுவிட்டு காரில் சென்னைக்குக் கிளம்பியுள்ளார்.

திரும்பும் வழியில், கிளிக்குடி என்ற ஊரருகே அவர்கள் வந்த கார் எதிர்பாராத விதமாக புளியமரம் ஒன்றில் மோதியது. இதில் வெங்கடேசனும் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். விபத்து குறித்து மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பியுள்ளனர். இறந்த இளவரசன் தன் தாயாரை உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நிறுத்தி வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

 

Related Articles

Next Story