படம் ஓடலைன்னா நமக்கு என்ன?.. ஃபாரீன் டூரில் ஜாலி பண்ணும் ரோமியோ பட நடிகை!..
மாஷ்அப் வீடியோக்கள் மூலமாக பிரபலமான மிருணாளினி ரவி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த மிருணாளினி ரவி 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த படத்திற்கு பிறகு விஷால் மற்றும் ஆர்யா நடித்த எனிமி படத்தில் நடித்த அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் சசிகுமார் ஜோடியாக எம்ஜிஆர் மகன் படத்தில் நடித்தார். அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.
ஜாங்கோ, சீயான் விக்ரமின் கோப்ரா மற்றும் இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தன. எனிமி படத்தை தவிர்த்து மிருணாளினி ரவி நடித்த எந்த ஒரு படமும் பெரிதாக ஓடவில்லை.
பிரியா பவானி சங்கரை போல படங்கள் தோல்வியை தழுவினாலும் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஹீரோயினாக நடித்து வருகிறார். ரோமியோ படத்திற்கு பிறகு அவருக்கு எந்தவித படமும் கிடைக்காத நிலையில், தற்போது இத்தாலியில் சுற்றுலா செய்து வருகிறார்.
பிரான்ஸ் நாட்டுக்கு டூர் சென்ற புகைப்படங்களை வெளியிட்ட மிருணாளினி ரவி அடுத்ததாக இத்தாலிக்கு சென்றுள்ள போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். புதிய படம் எதுவும் கிடைக்காத நிலையில், இதுவரை நடித்த படங்களில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஜாலி டூர் சென்றுள்ளார்.
சொகுசு படகில் மிருணாளினி ரவி செம ஜாலியாக போஸ் கொடுத்ததை பார்த்து, இப்படியே டூர் அடிச்சிட்டு ஹேப்பியா இருங்க என்றும் நல்ல ஸ்க்ரிப்ட் தேர்வு செய்து நடிங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.