தென் ஆப்பிரிக்காவில் தன்னுடைய உரிமையாளரின் மோதிரத்தை விழுங்கிய நாய் அவதிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியாவைச் சேர்ந்த பெப்பர் என்ற நாய் குறும்புகளுக்குப் பெயர் போனது. இது செய்யும் குறும்புகளுக்காவே தனது உரிமையாளரால் மிகவும் விரும்பப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தனது நிச்சயதார்த்த மோதிரத்தைக் காணவில்லை என அந்த உரிமையாளர் தேடிக் கொண்டு இருக்க, குறும்புக்கார பெப்பர் சோகமாகவும் உடல்நலமில்லாமலும் வீட்டில் இருந்துள்ளது.
எனவே பெப்பரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்ல அதன் வயிற்றை ஸ்கேன் செய்து பார்க்க, அதில் மோதிரம் இருந்துள்ளது. இதன் பின்னர் மருந்துகளின் மூலம் பெப்பரை வாந்தி எடுக்க வைத்த மருத்துவர்கள், பெப்பரைக் காப்பாற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக பெப்பரின் உரிமையாளர் சமூகவலைதளத்தில் பதிவிட அது இப்போது வைரலாகி வருகிறது.
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…