காணாமல் போன ‘வெள்ளையனும், கருப்பணும்’...‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ டிரெய்லர் வீடியோ...
நடிகர் சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். ஏற்கனவே, பசங்க, சூரரைப்போற்று உள்ளிட்ட சில சிறந்த திரைப்படங்களை அவர் தயாரித்திருந்தார். தற்போது அவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும். இப்படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இப்படம் அமேசான் பிரைமில் விரைவில் வெளியாகவுள்ளது.

கிராமத்தில் ஆசையாக ஒரு வெள்ளை மற்றும் கருப்பு மாடுகளை வளர்த்துக்கொண்டு மனைவியுடன் ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். திடீரென அந்த 2 மாடுகளும் காணாமல் போகிறது. அதை தேடி அவர் அலைகிறார். அந்த மாடுகளை அவர் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதிக்கதை. இப்படத்தை அரிசில் மூர்த்தி என்பவர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகம் மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் உ்ள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.