">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் சென்ற பணம் – விசாரணையில் முக்கியத் திருப்பம்!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் சிபிஐ சில முக்கியமான தகவல்களை கண்டுபிடித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் சிபிஐ சில முக்கியமான தகவல்களை கண்டுபிடித்துள்ளது.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை சம்மந்தமான வழக்கு இப்போது சிபிஐ கைவசம் உள்ளது. அது சம்மந்தமான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் பெயரில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், அவரது மேலாளர் சாமுவேல் மிரான்டா, ஸ்ருதி மோடி ஆகிய 6 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கு விசாரணையில் ஒரு திருப்பமாக சுஷாந்தின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் அவரது கணக்கில் இருந்து அவரின் முன்னாள் காதலியும் தோழியுமான அங்கீதாவின் வீட்டுத் தவணைக்கு பணம் சென்றதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கீதாவின் அந்த வீட்டு மதிப்பு 4.5 கோடி ஆகும். ஏன் சுஷாந்த் அங்கீதா வீட்டுத் தவணையை செலுத்தி வந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சிபிஐ யின் இந்த குற்றச்சாட்டை அங்கீதா மறுத்துள்ளார்.