பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அக்ஷய்குமார், விவேக் ஓபராய், அமிதாப் பச்சன் உள்பட பல நடிகர்கள் தமிழ் உட்பட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இன்னொரு பிரபல நடிகரான அஜய்தேவ்கான் தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் அடுத்த திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர் . ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா இணைந்து நடித்து வரும் இந்த படம் ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் ஏற்கனவே பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் அஜய் தேவ்கான் இணைந்துள்ளார். முதலில் அஜய் தேவ்கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் அவரது கேரக்டர் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு முழுவதும் வரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அஜய் தேவ்கான் காட்சிகளின் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது என்றும், இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜய்யை வரவேற்பதாகவும் மாறாக ’ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
தமிழ் சினிமாவில்…
நாம் எதேச்சையாக…
ஹெச்.வினோத் இயக்கத்தில்…
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…