
சூர்யா தற்போது ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் ஹரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் அதிரடி ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
இதனை அடுத்து கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதும் இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை தொடங்கியுள்ள இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களைத் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறதே
இந்த நிலையில் இந்த படத்திற்கு அவர் ஜிவி பிரகாஷை இசை அமைப்பாளராக இயக்குனர் வெற்றிமாறன் தேர்வு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இன்று மாலை 4 மணிக்கு, தான் இசையமைக்கும் 75வது படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளதால், சூர்யா வெற்றிமாறன் இணையும் படத்தில் தான் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க இருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது
#GV75 announcement today at 4 pm … with a big special project .. keep guessing
— G.V.Prakash Kumar (@gvprakash) January 2, 2020



