கழிவறையில் வாழும் தாய் : இரக்கமில்லாத மகன் மற்றும் மருமகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தனது வளர்ப்புத்தாயை கழிப்பறையில் தங்க வைத்து கொடுமைப்படுத்திய மகன் மற்றும் மருமகளை போலிஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோட்ஸ் நகரைச்சேர்ந்தவர் நிகோலஸ் என்பவர். இவரின் தாயின் சகோதரியான வளர்ப்புத் தாய் நிகோலஸின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு தற்போது 92 வயது ஆகிறது. இந்நிலையில் மூதாட்டிக்கு சரியாக இருப்பிடம் அமைத்துக் கொடுக்காமல் தங்கள் வீட்டில் உள்ள பாழடைந்த பயன்படுத்தாத கழிவறையில் அவரைத் தங்க வைத்துள்ளனர் நிகோலஸும் அவரது மனைவியும்.

இதையறிந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அந்த மூதாட்டியை மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்துள்ளார். மேலும் வளர்ப்புத் தாயை சரியாகப் பராமரிக்காத நிகோலஸ் மற்றும அவரது மனைவியைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
adminram