மாமியார் தலையில் கடித்த மருமகள் – ஆறு தையல் போட்டு மருத்துவமனையில் அனுமதி !

Published On: December 17, 2019
---Advertisement---

37c16296235d247bc6eb5527184a619c

பொள்ளாச்சியில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே நடந்த சண்டையில் மாமியாரை தலையில் கடித்துள்ளார் மருமகள்.

பொள்ளாச்சி மாவட்டம் மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி. பத்திரப்பதிவராக பணியாற்றும் இவருக்கு சரவணன் என்ற மகனும் கல்பனா என்ற மருமகளும் உள்ளனர். கல்பனாவும் சரவணனும் தனியாக வசித்து வரும் நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்து தாய் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார் சரவணன்.

இதனால் மாமியார் நாகேஸ்வரியின் மேலும் கோபமாக இருந்துள்ளார் கல்பனா. இது சம்மந்தமாக நடந்த தகராறு ஒன்றில் கல்பனா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை வாபஸ் வாங்குமாறு கல்பனா நாகேஸ்வரியை வற்புறுத்தியுள்ளார். இது சம்மந்தமாக நடந்த வாக்குவாதத்தில் கோபமான கல்பனா நாகேஸ்வரியை தலையில் கடித்துள்ளார்.

இதில் நாகேஸ்வரியின் தலையில் ஆழமாகக் காயம் பட அவருக்கு மருத்துவமனையில் 6 தையல் போடப்பட்டுள்ளது.

Leave a Comment