தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்.. !
"தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்.. !
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது...!"
கம்பீரமான பாடல். இந்திய நாட்டின் தேசப்பற்றை இதை விட சிறந்ததாக ஒரு திரைப்படப்பாடலில் எடுத்துக்கூற முடியாது. இன்று வரை சுதந்திர தினவிழாவில் கம்பீரமாக ஒலிக்கும் பாடலாக மாறிவிட்டது. வித்யாசாகர் இசையில் வைரமுத்து வரிகளில் அர்ஜூன் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த் படத்தில் இடம்பெறும் பாடல் இது. இப்பாடலை உணர்ச்சிப்பூர்வமாக பாடியிருப்பவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
தனது படங்களில் எங்காவது ஒரு இடத்தில் தனது தேசப்பற்றைக் காட்டி நம்மை நெகிழச் செய்திருப்பார். யார் என்று சொல்லத் தேவையில்லை.
அவர் தான் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இவரது இந்த ஆக்ரோஷமான நாட்டுப்பற்றுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர் பிறந்தது சுதந்திர தினத்தன்று.
இந்தியா வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் ஆகஸ்ட் 15, 1947. இவரது பிறந்தநாளும் ஆகஸ்;ட் 15ல் தான் வருகிறது. ஆனால் வருஷம் 1964. இருந்தாலும் சுதந்திர தின நாளில் பிறந்தநாளை ஆண்டு தோறும் கொண்டாடி தனது நாட்டுப்பற்றை பறைசாற்றி வருவது என்பது உண்மையாகவே சந்தோஷப்பட வேண்டிய தருணம் தான்.
தனது பிறந்தநாளே சுதந்திரத்தினத்தன்று வருகிறது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். அந்த வகையில் நமது ஆக்ஷன் கிங் அர்ஜூன் பிறந்தநாளையொட்டி அவரைப் பற்றிய சிறப்பு கட்டுரையை இங்கு பார்க்கலாம்.
இவரது இயற்பெயர் அர்ஜூன் சர்ஜா. 1979ல் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இன்று வரை தொடர்கிறார். இவரது மனைவியின் பெயர் நிவேதிதா. ஐஸ்வரியா என்ற ஒரே மகளைப் பெற்றுள்ளார். இவர் 2013ல் வெளியான விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அர்ஜூனின் தந்தை ஜே.சி.ராமசாமி. இவர் முன்னாள் புகழ்பெற்ற கன்னட திரைப்பட நடிகர். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார்.
இவரது படத்தலைப்பே தாயின் மணிக்கொடி, ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், சுதந்திரம் என்று நாட்டுப்பற்றை உணர்த்தும் விதத்தில் இருக்கும். இவரது நடிப்பில் மிளிர்ந்த தேசப்பற்று மிக்க படங்களை பார்க்கலாம்.
சுபாஷ்
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1996ல் வெளியான படம். அர்ஜூன், ரேவதி, ஜெய்சங்கர், மணிவண்ணன், பிரகாஷ்ராஜ், வடிவேலு, விவேக், சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை அமைப்பாளர் வித்யாசாகர். ஹவாலா, ஹீரோ ஹோண்டா, ஹே சலோமா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
சுதந்திரம்
2000ல் கே.ஆர்.ஜி. தயாரிப்பில் வெளியான இப்படத்தை ராஜ்கபூர் இயக்கினார். அர்ஜூன், ரம்பா, பாலசிங், நாசர், ரகுவரன், ரஞ்சித், வையாபுரி, விவேக், ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இசை எஸ்.ஏ.ராஜ்குமார். கொகோ கோலா, என்னவோ மாற்றம், கொஞ்சம், மழை, மழை, வார்த்தை இல்லாமல் ஆகிய பாடல்கள் உள்ளன.
வந்தே மாதரம்
2010ல் டி.அரவிந்த் இயக்கத்தில் வெளியான படம். தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது. பின்னர் தெலுங்கிலும் வெளியானது. இப்படத்தில் மம்முட்டி, அர்ஜூன், ஷ்ரதா ஆர்யா, ராஜ்கபூர், நாசர், ஜெய் ஆகாஷ், ஜெகதீஷ் தீபக் ஜேத்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. வந்தே மாதரம், சஞ்சீவனா, ஒன் டூ த்ரி, திரும்பி திரும்பி, கலாகலாகலாகலே...
ஜெய்ஹிந்த்
1994ல் அர்ஜூன் இயக்கத்தில் வெளியான முதல் படம். ஜோடியாக ரஞ்சிதா நடித்துள்ளார். வித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. கவுண்டமணி, மனோரமா, செந்தில், மேஜர் சுந்தரராஜன், சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். முத்தம் தர ஏத்த இடம்....?, கண்ணா என் சேலைக்குள்ள, போதை ஏறிப்போச்சு, தண்ணி வச்சு போனா வச்சு, ஜெ;யஹிந்த் ஆகிய பாடல்கள் உள்ளன.
தாயின் மணிக்கொடி
1998ல் வெளியான இப்படத்தின் இயக்குனரும் அர்ஜூன் தான். தபூ, நிவேதிதா ஆகியோர் உடன் நடித்துள்ளனர். நூறாண்டுக்கு ஒருமுறை, அடி ராணி சுல்தானா, மிஸ்டர் ஹாலிவுட், சிக்ஸ்டீனா செவன்டீனா. அன்கிள், அங்கிள், யாஹான் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இவரது பிறந்தநாளுக்கு நம் டீம் சார்பாக வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.