மொட்டை ராஜேந்திரனின் மொட்டைக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம் இருக்கா?

by adminram |

4ce394282bca06baa6e74a299ca20e18

சண்டை காட்சிகளில் கூட்டத்தில் ஒருவராக நடித்துக்கொண்டிருந்தவர் தான் மொட்டை ராஜேந்திரன். பின்னர் இவரை அடையாளப்படுத்தியது பிதாமகன், நான் கடவுள் படங்களில் நடித்தது தான். அதுவரை ராஜேந்திரனாக இருந்த இவர் நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்த பின்னர் தான் மொட்டை ராஜேந்திரனாக அடையாளம் காணப்பட்டார்.

a5fe0074042f7726cdc1b70f003c5671

இந்நிலையில் தனது பெயரில் உள்ள அடைமொழியில் உள்ள ரகசியத்தை குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், " கேரளாவுக்கு ஷூட்டிங் சென்றபோது சண்டை காட்சி படமாக்கப்பட்டது அப்போது அடி வாங்கிக்கொண்டு அங்குள்ள தொழிற்சாலை நீரில் விழவேண்டும். அந்த காட்சியில் நடித்து முடித்ததில் இருந்து என தலைமுடி மொத்தமாக போய்விட்டது. அந்த நேரத்தில் அது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. ஆனால், பின்னாளில் அதுவே என் அடையாளமாக மாறிவிட்டது என கூறி மகிழ்ந்தார்.

Next Story