பிரபுதேவா கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் ஸ்ட்ரீட் டான்ஸர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பிரபுதேவா கௌரவ வேடத்தில் நடித்துள்ள ஸ்ட்ரீட் டான்ஸர் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நடனம் சம்மந்தப்பட்ட இந்த படத்தை ரெமே டி ஸோசா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் 25 வருடங்களுக்கு முன்னர் பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் இடம்பெற்ற முக்காலா முக்காபுலா பாடல் ரிமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியான டிரைலரில் அந்த பாடல் இடம்பெற்றது. இந்தப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்பாடலில் பிரபுதேவாவின் நடனத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…