Categories: Cinema News latest news

காந்தரா 2 ஹிட்!.. ரிஷப் ஷெட்டிக்கு இப்படி ஒரு வரவேற்பா?!.. வீடியோ சும்மா அள்ளுது!..

Kantara 2: கன்னட திரை உலகமே கொண்டாடும் இயக்குனர் மற்றும் நடிகராக மாறி இருக்கிறார் ரிசப் ஷெட்டி. இவர் கடந்த 10 வருடங்களாக கன்னட திரையுலகில் இருந்து வருகிறார். சில படங்களை ஏற்கனவே இயக்கி இருக்கிறார். 2022ம் வருடம் வெளியான காந்தாரா படம் மூலம் நடிகராகவும் மாறினார். 16 கோடி பட்ஜெட்டில் உருவான காந்தாரா திரைப்படம் தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று அசத்தலான வெற்றியை பெற்று 400 கோடி வரை வசூல் செய்தது. பொதுவாக மற்ற மொழி திரைப்படங்கள் வடமாநிலங்களில் வெற்றி பெறுவது கடினம்.

ஏனெனில் அவர்களின் நேட்டிவிட்டியோடு மற்ற மொழிப்படங்கள் ஒத்துப்போகாது. ஆனால் பாகுபலி 2, கே.ஜி. எப் 2. புஷ்பா 2 வரிசையில் காந்தாரா 2 படமும் ஹிந்தி மொழியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. Kantara Chapter 1 என்கிற தலைப்பில் வெளியான இப்படம் ஹிந்தியில் மட்டும் 100 கோடி வரை வசூல் செய்திருக்கலாமென கணிக்கப்படுகிறது. கடந்த 2ம் தேதி வெளியான படம் தற்போதுவரை 500 கோடி வசூலை தாண்டி விட்டது.

சில வருடங்களுக்கு முன் ரிசப் ஷெட்டி இயக்கிய ஒரு படத்திற்கு வடமாநிலங்களில் ஒரு தியேட்டர் கூட கிடைக்காத நிலையில் காந்தாரா 2 திரைப்படம் 5000 தியேட்டர்களில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முழுக்காரணம் ரிஷப் ஷெட்டியின் கடுமையான உழைப்பு மற்றும் சினிமா மீது அவருக்கிருக்கும் காதல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வடமாநிலங்கலில் இதை விட குறைந்த தியேட்டரில் வெளியானாலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக தற்போது தியேட்டர்களை அதிகப்படுத்தியுள்ளனர்.
இதற்கு நன்றி சொல்லும் விதமாக ரிசப் ஷெட்டி சமீபத்தில் மும்பை சென்றிருந்தபோது அவருக்கு ரசிகர்கள் பூ தூவி வரவேற்று அவரை நெகிழ்ச்சிப்படுத்தி விட்டனர். இதை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
ராம் சுதன்