கணவன் மனைவி கொலை ; அருகில் கிடந்த கடிதம் ! விலகாத மர்மம் !

Published on: February 14, 2020
---Advertisement---

2af9b970b1ab811c0141e9f5813b325b

கேரளாவின் திருச்சூர் பகுதியில் வசித்து கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டது பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தைபரம்பத் வினோத் மற்றும் ரேமா தம்பதியினர். இவர்களுக்கு நயானா என்ற மகளும் நீரஜ் என்ற மகனும் உள்ளனர். வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் சமீபத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அவர்களது உடலைக் கைப்பற்று உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீஸார் அவர்கள் வீட்டில் சோதனை இட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில், ’தவறு செய்தவர்களை தவிர மற்ற அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’ என எழுதப்பட்டு இருந்தது.

இதனால் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர். இந்த கடிதத்தை வைத்து குற்றவாளியைப் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

Leave a Comment