முதியவர்களை குறிவைத்துக் கொல்லும் கொலைகாரன் – சைக்கோ கொலையாளியா ?

சேலத்தில் நள்ளிரவில் பிளாட்பார்ம்களில் படுத்து உறங்கும் முதியவர்களை இளைஞர் ஒருவர் குறிவைத்துக் கொல்வது மக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

பெருநகரங்களில் வீடு இல்லாதவர்கள் தெருவோரங்களிலும் மூட்டப்பட்ட கடைக்கு வெளியேயும் படுத்துத் தூங்குவது வாடிக்கை. அதுபோல படுத்திருப்பவர்களைக் கொன்று அவர்களிடம் இருக்கும் பணத்தை திருடிச் செல்லும் கொடூர திருடன் ஒருவன் சேலத்தில் உருவாகியுள்ளான்.

நேற்று 70 வயது முதியவர் ஒருவரையும் இன்று 85 வயது மதிக்கத்தக்க அங்கப்பன் என்பவரையும் தலையில் கல்லைப்போட்டு அந்த இளைஞர் கொன்று அவர்களிடம் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். இதனால் இந்த அந்த இளைஞர் சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது சம்மந்தமான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியதை கொலையாளியைப் பிடிக்க சேலம் போலிசார் தனிப்படை அமைத்துள்ளனர். இப்போது போலீஸார் அவரது படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த இரு கொலை சம்பவங்களும் சேலம் வாழ் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram