ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார். மும்பையில் குண்டு வைக்கும் தீவிரவாத குழுக்களை கண்டறித்து அவர்களை வேறோடு அழிக்கும் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். இப்படம் ஹிந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டது. அதன்பின் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி, சர்கார் என 2 திரைப்படங்களில் நடித்தார்.
விஜயின் 65வது திரைப்படத்தை முருகதாஸ்தான் இயக்க வேண்டியிருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் விலகி விட நெல்சன் உள்ளே வந்தார். அதுதான் தற்போது பீஸ்ட் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், துப்பாக்கி 2 திரைப்படத்தின் கதையை முருகதாஸ் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதில் விஜய் நடிக்கவில்லை எனவும், கமல்ஹாசன் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. முருகதாஸ் கடந்த சில வருடங்களாகவே கமல்ஹாசனை சந்தித்து தான் உருவாக்கும் கதைகள் பற்றி விவாதித்து வருகிறார்.
| இதையும் படிங்க |
| உன் மொத்த அழகும் அங்கதான் இருக்கு!… ஜாக்கெட்டில் சூடேற்றிய நடிகை ஷிவானி…. |
எனவே, விரைவில் அவர்கள் இருவரும் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என திரையுலகம் கருதுகிறது.
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…