சூர்யா 45ல் களமிறங்கும் இசையமைப்பாளர்.. இப்போ இவர் பாட்டு தான் டிரண்ட்

by ராம் சுதன் |
சூர்யா 45ல் களமிறங்கும் இசையமைப்பாளர்.. இப்போ இவர் பாட்டு தான் டிரண்ட்
X

ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திலிருந்து திடீரென ஏ ஆர் ரகுமான் விலகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. அந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. அதற்கு அடுத்தபடியாக ஆர்.ஜே பாலாஜி இயக்கும் ஒரு புதிய படத்தில் சூர்யா கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் நேற்று திடீரென படத்திலிருந்து ஏ ஆர் ரகுமான் விலகுவதாக தகவல் வெளியானது. இதற்கு பின்னணியில் என்ன காரணம் என அனைவரும் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் பல பேட்டிகளில் ஆர் ஜே பாலாஜி கூறும் போது ஏ ஆர் ரகுமான் என் படத்திற்கு இசையமைக்க சம்மதித்ததே பெரிய விஷயம்.

நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறி வந்தார். இந்த நிலையில் நேற்று படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பதை படக்குழு அறிவித்தபோது அந்தப் போஸ்டரில் ஏ ஆர் ரகுமான் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து விசாரிக்கும் போது ஏ ஆர் ரகுமான் தானாகவே விலகி விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாளில் படத்திற்கான புதிய இசையமைப்பாளரை படக்குழு அறிவிக்கும் எனவும் தகவல் தெரிவிக்கின்றது.

இதற்கிடையில் சூர்யா 45 படத்தின் புதிய இசையமைப்பாளர் யார் என்பதை தற்போது படக்குழு அறிவித்திருக்கிறது. தற்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபியங்கர்தான் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே இரண்டு ஆல்பம் பாடல்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

அந்தப் பாடல் தான் இப்போது சோஷியல் மீடியாக்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகின்றது. அவர்தான் இப்போது சூர்யா-45 படத்திற்கு புதிய இசையமைப்பாளர் என சொல்லப்படுகிறது. சாய் அபிங்கர் லோகேஷ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்க போவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

பென்ஸ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக முதன்முதலில் அறிமுகமாகிறார் சாய் அபியங்கர். அதற்கு அடுத்தபடியாக சூர்யா 45 படத்தில் தற்போது இசையமைப்பாளராக பணியாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story