கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய இறுதிகால செலவிற்கும் இறுதிச்சடங்கிற்கும் 31 ஆயிரத்து 500 ரூபாய் சேமித்து வைத்து இருந்தார். ஆனால் அவர் சேமித்து வைத்திருந்தது பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமல் செய்யப்பட்ட பண மதிப்பிழப்பு குறித்து அறியாத அவர் அந்த நோட்டுகளை மாற்றாமல் வைத்திருந்தார். தற்செயலாக இப்போது எடுத்து பார்த்தபோது அந்த நோட்டுகள் செல்லாது என தெரிய வந்தததால், தான் கஷ்டப்பட்டு பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த பணம் செல்லாது என்பதை அறிந்தவுடன் அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த செய்திகள் புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது
இந்த நிலையில் அந்த மூதாட்டிக்கு உதவி செய்யும் வகையில் கோவை ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பழைய ரூபாய் நோட்டுக்கு பதிலாக 31,500 மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டது. இதைப் பெற்றுக் கொண்ட அந்த மூதாட்டி பெரும் மகிழ்ச்சி அடைந்து ரஜினி ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 95 வயது மூதாட்டியின் பணம் மதிப்பிலிருந்து போனதை அடுத்து ரஜினி ரசிகர்கள் செய்த இந்த உதவி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…