97 வயதில் பஞ்சாயத்து தலைவரான மூதாட்டி ! ராஜஸ்தானில் சாதனை !!

Published on: January 18, 2020
---Advertisement---

85da229f32ad312e91db255247539774

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டி ஒருவர் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கிராமப்புறங்களுக்க்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த வியாழக்கிழமை நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் ஒரு பாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சிகார் மாவட்டத்தில் நீம் கா தானா உபக் கோட்டத்தின் கீழ் வரும் புராணவாஸ் கிராமப் பஞ்சாயத்திலிருந்து 97 வயது மூதாட்டியான வித்யா தேவி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் அவரை எதிர்த்து மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் வித்யா தேவி அதிகபட்சமாக 803 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம் இந்தியாவிலேயே மிக அதிகவயதில் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

Leave a Comment