சூர்யா படம் வரும் போது என் படம் வரணும்!…இயக்குனர் ஹரிக்கு இது தேவையா?…

சூர்யாவும் – ஹரியும் இணைந்து ஆறு,வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என 5 திரைப்படங்கள் வெளிவந்தது. அடுத்தது மீண்டும் சூர்யாவை இயக்க விரும்பினார் ஹரி. அவருக்கென ஒரு கதையை உருவாக்கினார். அதற்கு ‘அருவா’ என தலைப்பையும் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஹரி ஒரே மாதிரியாக படம் எடுப்பதால் சலித்துப்போன சூர்யா அப்படத்தின் கதை சரியில்லை எனக்கூறி ஹரியிடமிருந்து எஸ்கேப் ஆனார். எனவே, வேறுவழியில்லாமல் தனது மச்சான் அருண் விஜயை வைத்து யானை என்கிற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் எப்போது வெளியாகிறதோ அப்போதே யானை படத்தையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என ஹரி கருதுகிறாராம். அதாவது, சூர்யா படத்திற்கு போட்டியாக தனது படத்தை வெளியிட வேண்டும் என அவர் கணக்கு போடுகிறாராம்.

yaanai

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, அப்போது தனது படம் வெளியாகும் என கங்கணம் கட்டி வேலை செய்து வருகிறாராம் ஹரி. ஆனால், ‘எங்க அண்ணங்கிட்ட மோதாத… தோத்துப்போயிடுவ’என சூர்யா ரசிகர்கள் ஹரியை திட்டி வருகின்றனர்.

எது ஜெயிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Published by
adminram