நான் சிரித்தால் படத்தின் வெற்றிவிழாவில் கலந்து கொண்ட பிக்பாஸ் புகழ் ஜூலி தன்னுடைய முதல் வெற்றி குறித்து புளங்காகிதம் அடைந்துள்ளார்.
கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் நான் சிரித்தால். குறும்பட இயக்குனர் ராணா இயக்கிய இந்த படத்தை சுந்தர் சி தயாரிக்க ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து இசையமைத்து இருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட ஜூலி ‘ இந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரத்துக்காக பலரும் என்னைப் பாராட்டினர். இது எனது முதல் வெற்றி. ஒரு குடும்பத்தின் வெற்றி. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அனைவரும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டனர். ’ என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…