நண்பன் படத்தை என்னை இயக்க சொன்னார் – பார்த்திபன் போட்டு உடைத்த ரகசியம்!

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் விஜய் தன்னையே முதலில் நண்பன் படத்தை இயக்க சொன்னதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் முக்கியமான கேள்வி. ரசிகர்கள் இது தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்க ரசிகர் ஒருவர் விஜய்யோடு இயக்குனர் பார்த்திபன் இருக்கும் புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்து ’தளபதி 65-ல் இவர்கள் இருவரும் இணைந்தால் மாஸாக இருக்கும்’ எனக் கருத்து தெரிவித்து பார்த்திபனை டேக் செய்தார்.

இதற்குப் பதிலளித்த பார்த்திபன் ‘Massக்கு MASTER- பிடிக்கும். Masterக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.'நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார். 'அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார். நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Published by
adminram