பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ வரும் ஞாயிறு முதல் சமூக வலைத்தளங்களான டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப் ஆகியவற்றிலிருந்து வெளியேறுவது குறித்து யோசித்து வருகிறேன்’ என டிவிட் செய்திருந்தார்.
இதைத்தொடந்து மோடிக்கு எதிரானவர்கள் இதை வரவேற்றும், ஆதரவாளர்கள் ‘வேண்டாம் போகாதீர்கள்’ என கெஞ்சியும் டிவிட் செய்து வருகின்றனர். அதேபோல் ‘வெறுப்பை கை விடுங்கள்.. சமூக வலைத்தளங்களை அல்ல’ என ராகுல் காந்தி மோடிக்கு அறிவுரை செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ மார்ச் 8ம் தேதி பெண்கள் தினம் என்பதால் சிறந்த பெண்கள் என் சமூக வலைத்தள பக்கங்களை நிர்வகிக்கலாம்’ என தற்போது டிவிட் செய்துள்ளார். மேலும் ’நீங்கள் உத்வேகம் அளிக்கும் பெண்ணா? மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறீர்களா? அப்படி எனில் உங்கள் தகவலை #SheinspiresUs என்கிற ஹேஷ்டேக் மூலம் பகிருங்கள். இந்த ஹேஷ்டேக்கை டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் பயன்படுத்துமாறு அவர் கூறியுள்ளார். இதன் மூலம் பெண்களின் விருப்பங்கள், கருத்துகள் இந்த உலகிற்கு எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து, அவர் சமூக வலைத்தள பக்கங்களிலிருந்து வெளியேறப்போவதில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நடிகர் சூர்யாவை…
பைரவி படத்தின்…
அமரன் திரைப்படம்…
Rajinikanth: நடிகர்…
பல பேர்…