என் பாட்டுக்கு ஒரு நாமினேஷன் கூட இல்லை – இசையமைப்பாளர் ஆதங்கம் !

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட்டான நிலையில் அது விருது வழங்கும் விழாவில் கூட சேர்க்கப்படவில்லை என அந்த படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்த மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும் அந்த படத்தில் வெள்ளாட்டு கண்ணழகி மற்றும் கோடி அருவி போன்ற பாடல்கள் வைரல் ஹிட் ஆகின.

ஆனாலும் கடந்த ஆண்டு வழங்கப்படட்  சிறந்த பாடல் விருது ஒன்றில் கூட இந்த பாடல்கள் போட்டியில் கூட இல்லை. இது இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை அதிருப்தியடைய வைத்துள்ளது. இது குறித்து தனது டிவிட்டரில் ‘மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் எந்த இசை விருது விழாவிலும் போட்டியிடவில்லை என்பது எனக்கு ஒன்றை கற்பித்துள்ளது. விருது கமிட்டியினரை விட ரசிகர்கள் நல்ல இசையறிவு உடையவர்கள்’ எனறு கூறியுள்ளார்.

Published by
adminram