Categories: latest news rajini kamal

இந்த பக்கம் ரஜினி – கமல்.. அந்த பக்கம் விஜய் சேதுபதி!.. சூப்பர் கதை!.. ஹைப் ஏத்தும் மிஷ்கின்!…

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கினார். அதன்பின் அவர் இயக்கிய அஞ்சாதே, பிசாசு, துப்பறிவாளன், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ ஆகிய எல்லா படங்களும் பேசப்பட்டது. கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்லும் இயக்குனர்களில் மிஷ்கின் முக்கியமானவர். கேமரா ஆங்கிளிலேயே கதை சொல்பவர்.

இவர் ஆண்ட்ரியாவை வைத்து இயக்கிய பிசாசு 2, விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய ட்ரெயின் ஆகிய இரண்டு படங்களின் வேலை முடிந்து விட்டாலும் இன்னும் ரிலீஸாகவில்லை. இயக்குனர் மிஷ்கின் கடந்த பல வருடங்களாகவே நடிகர் மிஷ்கினாக மாறிவிட்டார். மாவீரன், லியோ உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் நடித்து சூப்பர் ஹிட் அடித்த டிராகன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் மிஷ்கின் கொடுத்த ஒரு பேட்டி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியின் தொகுப்பாளனி ‘நீங்கள் கமல் சாரை வைத்து ஒரு படம் எடுக்க போகிறீர்கள் என்றால் அவருக்கு என்ன மாதிரியான கதையை யோசிப்பீர்கள்?’ என கேட்டார்.

அதற்கு  ‘ரஜினி சாரும், கமல் சாரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டேன். உடனே மூன்று நாட்கள் அமர்ந்து ஒரு கதையை உருவாக்கி என் உதவியாளர்களிடம் சொன்னேன். அவர்களெல்லாம் ‘சூப்பர்.. போய் அவர்களிடம் சொல்லுங்கள்’ என்றார்கள். ‘இது உங்களுக்காக சொன்னேன் அவ்வளவுதான்’ என சொல்லிவிட்டேன். இந்த கதையை நான் தயாரிப்பாளர் தாணுவிடம் கூட சொன்னேன்.

அவருக்கும் பிடித்திருந்தது. இது ஒரு சரித்திரக் கதை. ஆனால் இதை ரஜினியிடமோ கமலிடமோ சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. யோசித்துப் பாருங்கள்.. ஒருபக்கம் ரஜினி.. ஒருபக்கம் கமல்.. ஒருபக்கம் விஜய் சேதுபதி.. இசை இளையராஜா.. படம் எப்படி இருக்கும்?’ என சொல்லி ஹைப்  ஏற்றியிருக்கிறார் மிஷ்கின்.

Published by
ராம் சுதன்