கனடாவில் முதுகலை படித்து வந்த குன்னூரைச் சேர்ந்த மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா யோர்க் பல்கலைக் கழகத்தில் படித்து வருபவர் நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் ஏஞ்சலினா ரேச்சல். இவரின் தந்தை ஆல்பர்ட் ராஜ்குமார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு அவரது படிப்பு முடியவுள்ளது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னதாக கனடாவில் அவர் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த ரேச்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த மர்மநபரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக கனடா போலிஸார் ரேச்சலின் தந்தையிடம் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ரேச்சலின் தந்தை ‘ எனது மகள் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அங்குள்ள ஊடகங்கள் அப்படி எதுவும் செய்தி வெளியிடவில்லை. எங்களுக்கே குழப்பமாக உள்ளது. விசா கிடைத்தவுடன் கனடா செல்ல இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…