
தனது வீட்டின் கழிவறையைப் பயன்படுத்துவோரை ரகசியமாக மொபைல் போனில் வீடியோ எடுத்த காமுகன் ஒருவனைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.
கிரீன் கவுச்சர் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 35 வயது நபர். இவரது வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவர் அவரின் கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். அப்போது அந்த கழிவறையில் ஒரு இடத்தில் துணிகள் சந்தேகத்திற்கிடமாக வைக்கப்பட்டிருந்தன. அதில் என்ன இருக்கிறது என அந்த பெண் துணிகளை விலக்கிப் பார்த்தபோது ரகசிய செல்போன் கேமரா ஒன்று கழிவறையில் நடப்பவற்றை படம் பிடித்துக் கொண்டிருந்தது.
அந்த செல்போனில் அதுபோல பல பெண்கள் மற்றும் சிறுமிகள் உடைமாற்றும் மற்றும் கழிவறையை பயன்படுத்தும் வீடியோக்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண், போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த செல்போனை கைப்பற்றி அதில் ஆய்வு மேற்கொண்டனர். அடுத்த கட்டமாக கிரவுன் கவுச்சர் மீது வழக்கு பதிவு செய்து பாலியல் குற்றம் செய்பவர் பட்டியலில் அவரை இணைந்துள்ளனர். இந்த சம்பவமானது கிரவுச்சரின் அண்டை வீட்டார் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.