காரில் நிர்வாணமாக கிடந்த சடலம்: நித்யானந்தாவின் சீடருக்கு ஏற்பட்ட அவலம் !

பாண்டிச்சேரியை சேர்ந்த நித்யானந்தாவின் சீடரான வஜ்ரவேல் என்பவர் காரில் நிர்வாணமாக இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பாண்டிச்சேரி ஏம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ரவேலு எனும் பேக்கரி அதிபர். இவர் தான் நடத்தி வரும் இரு பேக்கரிகளையும் நித்யானந்தாவின் பெயரில் நடத்தி வருகிறார். அந்த அளவுக்கு அவர் மேல் தீவிரமான பக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு ஏம்பலத்தில் கடையை அடைத்துவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்று 2 லட்சம் ரூபாய் பணம் வாங்க புறப்பட்டுள்ளார். அங்கு சென்ற பணத்தை வாங்கிய அவர் அதன் பின் மாயமாகியுள்ளார். இது சம்மந்தமாக உறவினர்கள் புகார் கொடுக்க காவல் துறை தேடுதலில் இறங்கியது.

வஜ்ரவேலுவின் மாமியார் வீடு இருக்கும் பகுதியான குருவிநத்தம் பகுதிக்கு அருகாக அவரது கார் நிற்க அதற்குள் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்தார் வஜ்ரவேலு. இந்நிலையில் இந்த கொலையை யார் செய்திருப்பார்கள்? வஜ்ரவேலு பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிற்து.

Published by
adminram