சென்னை வீதியில் நிர்வாணமான உலவிய பெண் ! விலகாத மர்மம் !

Published on: January 30, 2020
---Advertisement---

7b56b0c6fb9f6e169aab6e412837bccb

சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியு கல்லூரி அருகே தெலுங்கு பேசும் பெண் ஒருவர் அதிகாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் பீதியைக் கிளப்பியது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரி அருகே, இன்று அதிகாலை நேரத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக உலாத்துவதாக காவல் துறை கண்ட்ரோ அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலிஸார் துணி எடுத்துச் சென்று அந்த பெண்ணுக்குக் கொடுத்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் தெலுங்கு மட்டுமே பேசியதாகவும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருந்ததாலும் அவரிடம் இருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை. இதையடுத்து அவர் வயிற்றை வலிக்கிறது என சொல்லியதை அடுத்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பக உதவியாளர்களை பாதுகாப்புக்கு நியமித்துள்ளனர். இதனால் அந்த பெண் யார் என்ற மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது.

Leave a Comment