Home > வாஸ்கோடகாமா... பட்டைய கிளப்பும் நகுலின் புதிய போஸ்டர்!
வாஸ்கோடகாமா... பட்டைய கிளப்பும் நகுலின் புதிய போஸ்டர்!
by adminram |
ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாய்ஸ். இதில் நண்பர்களில் ஒருவராக நடிகர் நகுல் நடித்திருந்தார். அதையடுத்து காதலில் விழுந்தேன். மாசிலாமணி, கந்தக்கோட்டை, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இதற்கிடையே நகுல் பின்னணி பாடகராக பல திரைப்படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள வாஸ்கோடகாமா என்ற புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு வெளிவந்துள்ள இந்த போஸ்டரில் குரங்கில் இருந்து மனிதன் உருவான பரிணாமாக வளர்ச்சியை குறிக்கிறது. இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது.
Next Story