சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் நமீதா... கவர்ச்சியா? கண்ணீரா?....
தமிழ் சினிமாவில் சரத்குமாருடன் ‘அர்ஜுனா அர்ஜூனா அம்பு விடும் அர்ஜுனா’ பாடல் மூலம் ரசிகர்களை கிறங்கடித்தவர் நமீதா. விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவரை பார்த்திபன் ஜெர்சி பசு என்றெல்லாம் அழைத்தார்.
கவர்ச்சி பாமாக வலம் வந்த நமீதா உடல் எடை கூடியதால் சினிமா வாய்ப்புகளை இழந்தார். எனவே, சின்னத்திரை பக்கம் ஒதுங்கி மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவர்களில் ஒருவராக இருந்தார். திடீரென திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரமெல்லாம் செய்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சில வருடங்கள் அமைதியாக இருந்த அவர் திடீரென பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க முடிவெடுத்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சீரியல் மூலம் நடிகை நமீதா ரீ-என்ட்ரீ கொடுக்கவுள்ளார். சீரியல் என்றால் ஒப்பாரி வைப்பதுதான் அதிகம். ஆனால், கவர்ச்சி விருந்தான நமீதா சீரியலில் கண்ணீர் வடிப்பாரா? இல்லை அங்கேயும் கவர்ச்சி காட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..