அகண்டா 2 டீசர் பார்த்தீங்களா!.. கழுத்துல சூலத்தை சுத்திக்கிட்டே எதிரிகளை வதம் பண்றாரே பாலையா!..

Published on: August 8, 2025
---Advertisement---

ஜூன் 10ம் தேதி நாளை நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் அகண்டா 2 படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

காட் ஆஃப் மாசஸ் என டோலிவுட்டில் பாலையாவை ஒட்டுமொத்த திரையுலகமும் கொண்டாடி வருகிறது. என்டிஆரின் மகனான பாலகிருஷ்ணா அரசியலில் பெரிதாக ஆர்வம் செலுத்தாமல் தொடர்ந்து சினிமாவில் மாஸ் படங்களில் நடித்து வருகிறார்.

பாலகிருஷ்ணாவின் சகோதரியின் கணவரான சந்திரபாபு நாயுடு தான் ஆந்திராவின் முதலமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் ஆர்வம் செலுத்தியிருந்தால், அப்பாவை போலவே இவரும் ஆந்திராவையே ஆட்சி செய்திருப்பார்.

பாலகிருஷ்ணா படங்கள் பற்றி ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியானாலும், அந்த படங்கள் எல்லாமே ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாகவே உள்ளன. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான தாகு மகராஜ் திரைப்படமும் நல்ல வசூலை அள்ளியது.

அகண்டா திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் 2ம் பாகம் உருவாகி வரும் நிலையில், இந்த ஆண்டு தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 25ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அகண்டா முதல் பாகமே அட்டகாசமாக இருந்த நிலையில், அகண்டா 2 திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இமய மலை போன்ற இடத்தில் எதிரிகள் சுற்றி வளைக்க திரிசூலத்தை எடுத்து கழுத்தில் சுற்றியபடியே எதிரிகளை கொன்று குவிக்கும் காட்சிகள் எல்லாம் கொல மாஸாக உள்ளது என ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பாலையாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்திலும் பாலகிருஷ்ணா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment